மோடி ஏற்கெனவே கூறியபடி இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: அதிமுக

மோடி ஏற்கெனவே கூறியபடி இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: அதிமுக
மோடி ஏற்கெனவே கூறியபடி இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: அதிமுக

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய எம்.பி தம்பிதுரை “இலங்கையில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். மனித உரிமை மீறல், போர்க்குற்ற தீர்மானத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கூறினார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com