இந்தியா
முத்தலாக் மசோதா : அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு
முத்தலாக் மசோதா : அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு
முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக தற்போது மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த முத்தலாக் சட்டம் தடை மசோதா கடந்த 25ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுக முத்தலாக் மசோதாவை வரவேற்பதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் முத்தலாக் சட்டம் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு ஆய்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதனால் முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

