பகலில் மருத்துவமனையில் நோஞ்சான் நோயாளியாக இருந்துகொண்டு இரவில் பல, அதிரடி வேலைகளை செய்து வந்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை. அவ ரை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருந்தனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மருத் துவமனையில் அவருக்கு துணையாக சுரேஷும் அங்கு தங்கினார். அவர் உறவினர் பெட்டுக்கு பக்கத்தில் ஒருவர் உடல் நலமில்லாமல் பரிதா பமாக படுத்திருந்தார். ’உடலில் ஏதோ பெரிய பிரச்னை போலிருக்கிறது. ரொம்ப பரிதாபமாக இருக்கிறாரே’ என நினைத்துக் கொண்டார் சுரேஷ்.
பகலில் பெட்டில் படுத்திருக்கும் அவரை இரவில் காணமுடிவதில்லை. இரண்டு மூன்று நாட்களாக இதே மாதிரி நடந்திருக்கிறது. அதிகாலை யில் அசந்து தூங்கிக்கொண்டிருப்பார். இரவில் மாயமாகிவிடுவார். பகலில் நோயாளியாக இருக்கும் இவருக்கு இரவில் மட்டும் எப்படி உடல் நலம் சரியாகிறது என்ற சந்தேகம் சுரேஷுக்கு. பொறுக்க முடியாமல், ஒரு நாள் அவரிடமே கேட்டார். ’’ராத்திரி மட்டும்தான் நல்ல காற்று கிடை க்குது. அதனால அதைச் சுவாசிக்கப் போயிட்டு வர்றேன்’’ என்றார். அதைத் தொடர்ந்து சுரேஷுடம் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார்.
சுரேஷ், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அவர்களும் இவர் மீது ஏதோ சந்தேகம் இருப்பதை தெரிவிக்க, போலீசுக்கு தெரிவித்தார் சுரேஷ். பிறகு தான் விஷயம் வெளியே வந்தது. அந்த நோயாளி, பிரபல திருடன்!
முதுகு மற்றும் வயிற்று வலி காரணமாக இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறான் அந்த திருடன். பல டெஸ்ட்டுகள் எடுத்தும் வலி தீரவில் லை என்று சொல்லிவிட்டு பெட்டில் சேர்ந்துவிட்டான். அதை வசமாகப் பயன்படுத்திக் கொண்டு, பகலில் பாதுகாப்பான இடம், இரவில் திருட்டு வேலை என ஈடுபட்டு வந்திருக்கிறான்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘’இவரை போல சிலர் இப்படி மருத்துவமனையில் பாதுகாப்பாக இருந்து கொண்டு திருட்டு வேலை யில் ஈடுபட்டு வருகின்றனர். வாடகை இல்லாமல் அறை கிடைத்துவிடுகிறது. சாப்பாடும் இங்கேயே கிடைத்துவிடுவதால் இது அவர்களுக்கு வசதியாகிவிடுகிறது’’ என்றனர்.
‘’இந்த மருத்துவமனைக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கிறார்கள். பாதுகாப்புக்கு இருப்பது 2 போலீஸ்காரர்கள்தான். அதிலும் ஒருவர் ஹோம்கார்ட், மற்றொருவர் டிராபிக்கை கவனிக்கிறவர். அதனால் திருடர்களை கவனிக்க முடியவில்லை. இனிதான் அதிகப் படியான சிசிடிவி கேமராவை பொருத்திக் கண்காணிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கிறது, மருத்துவமனை நிர்வாகம்!