\
விமானத்தில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்

விமானத்தில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்

விமானத்தில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்
Published on: 

உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் புக் செய்வதற்கு ஆதார் கார்டு எண் விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. 

NFL-ன் விதிமுறைகளின் படி, இனி விமானப்பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய கட்டாயமாக ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் எண் மற்றும் பான் எண்களை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இவை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக NFL தெரிவித்துள்ளது. பயணிகள் ஆதார் எண்களை கொடுத்த பின்பு பயணிகளுக்ககென தனி கார் (CAR) எனப்படும் கார்டு வழங்கப்படும்.

இதனை டி.ஜி.சி.ஏ. தயார் செய்து  கொடுக்கும். இதன் மூலம் பயணிகள் எந்த சிரமமும் இன்றி விமானத்தில் எளிதாக பயணம் செய்யலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com