மருத்துவப் படிப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு
மற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றி பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயபிரகாஷ் நட்டா "இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதாவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு 3 சதவிதத்தில் இருந்து 5 சதவிதமாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பார்வையின்மை, குறைவான பார்வைத் திறன், செவித்திறன் குறைபாடு, அமில வீச்சுக்கு உள்ளானவர்கள் என 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அரசின் இந்தப் புதிய சலுகையை பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.