உள்நாட்டு விமானங்களில் லக்கேஜுக்கு கூடுதல் தொகை
உள்நாட்டு விமானங்களில் கொண்டு செல்லப்படும் அதிக எடை கொண்ட பொருட்களுக்கான விலையை ஏர்லைன்ஸ் ஃபெடரேஷன் உயர்த்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தபடி, ஒரு நபரோ அல்லது நிறுவனத்தை சார்ந்தவர்களோ எடுத்துச் செல்லும் 15 முதல் 20 கிலோ எடை கொண்ட பொருட்களுக்கு 100 ரூபாய் தனியார் விமானங்களுக்கு செலுத்தினால் போதும் என்ற நடைமுறை இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்த மறு விசாரணை கடந்த புதன்கிழமை வந்தபோது நீதிமன்ற உத்தரவின்படி தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு இது மிகவும் குறைவான தொகை என்று வாதிடப்பட்டது. இதனால் ஏர்லைன்ஸ் ஃபெடரேஷன் அமைப்பு எடுத்த முடிவின்படி, ஒரு கிலோவுக்கு 220 ரூபாய் முதல் 350 வரை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. முன்னதாக நீதிமன்றம் அறிவித்த கட்டணத்தை இதுவரை யாரும் வசூலிக்கவில்லை என்றும், அதற்கு அதிகமான தொகையை தான் வசூலிக்ககிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே சுமார் 23 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளித்து வருகிறது. மற்ற விமானங்கள் 15 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.