மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பால் 20% மீண்ட அதானி குழும பங்குகள்! காரணம் இதுதான்?

மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பால் 20% மீண்ட அதானி குழும பங்குகள்! காரணம் இதுதான்?
மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பால் 20% மீண்ட அதானி குழும பங்குகள்! காரணம் இதுதான்?

வர்த்தக பங்கு குறியீட்டாளரான மோர்கன் ஸ்டான்லி அமைப்பின் அறிவிப்பால், வீழ்ச்சியில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகள் வியாழக்கிழமையான இன்று 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் காரணமாக, பங்கு சந்தையில் படுவீழ்ச்சியை கண்டது அதானி குழுமம். தொடர்ந்து இறங்கு முகத்தையே கண்டு வந்த அதானி குழும பங்குகள், `அதானி அவர் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான்’ என JP Morgan நிறுவனம் அறிவித்ததின் காரணங்களால், இடையில் இரண்டு நாட்கள் இரண்டு வர்த்தக பிரிவுகளில் திடீரென ஏற்றத்தை கண்டுள்ளது.

ஓரளவு ஏற்றம் கிடைத்தாலும்கூட, அதானி குழுமத்திற்கு மேலும் பேரிடியாக இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்ததாக, கலால் வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதிகுறித்த முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியன.

இதனால் மேலும் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியையே சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கிடையேதான் 'மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷ்னல் அமைப்பின்’ அறிவிப்பால் அதானி குழும பங்குகள் 20% வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளன. மோர்கன் ஸ்டான்லி கேபிடல் இண்டர்நேஷனல் அமைப்பென்பது, சிறந்த பங்கு குறியீட்டை வழங்கிவரும் அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது. 

மோர்கன் ஸ்டான்லி அறிவிப்பின் படி, “அதானி குழுமப் பத்திரங்களில் உள்ள சில குறிப்பிட்ட முதலீட்டாளர்கள், Free float (இலவச மிதவை) இனி நீடிக்க மாட்டார்கள். இந்த நிலையானது தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான மாற்றங்கள் அறிவிக்கப்படும்” என்று தெரிகிறது. இதில் சர்வதேச முதலீட்டாளர்களால் பொதுப் பங்குச்சந்தைகளில் வாங்குவதற்கு நிலுவையில் உள்ள பங்குகளின் விகிதத்தையே, இலவச மிதவை என மோர்கன் ஸ்டான்லி வரையறுக்கிறது. அதன்படி அதானி குழுமத்தில் இலவச மிதவையின் கீழிருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் வெளியேற்றப்பட்டால், புதிய முதலீடுகள் உள்ளே வரும் வாய்ப்பு அதிகரிக்கும், இதனால் அதானி குழுமத்தின் பங்கு குறியீட்டில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இருப்பினும் வியாழன் கிழமையான இன்று, நாளின் தொடக்கத்தில் 20 சதவீதம் சரிந்து ரூ.1,726.95 ஆக இருந்த அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள், பிற்பகலில் 25 சதவீதம் உயர்ந்து ரூ.2,200 ஆக இருக்கிறது. இதனால் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளானது, கடந்த 52 வாரங்களில் குறைந்த அளவான ரூ. 1,017-ல் இருந்து ஐந்து அமர்வுகளுக்கு பிறகு 116 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ. 4,189.55-ல் உள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ஜ்-ன் நிறுவனர் நேட் ஆண்டர்சன், “அதானி குழுமம் பற்றிய மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ள சமீபத்திய வெளியீடானது, அதானி குழுமத்தின் பங்குகளை நிலைநிறுத்துவதில் குறுகிய விற்பனையாளர்களை மீட்டெடுக்கும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com