ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!

ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!

ஹோல்சிம் இந்தியா பிரிவை அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. இந்த இணைப்பின் மதிப்பு 1050 கோடி டாலர் (சுமார் ரூ.81,361 கோடி) என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்தியாவின் வளர்ச்சியில் நாங்கள் நம்பிக்கை வைத்திருகிறோம். ஏற்கெனவே கிரீன் எனர்ஜி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் நாங்கள் இருக்கிறோம். இந்த சூழலில் சிமெண்ட் பிரிவிலும் இணையும்போது மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமாக மாறுவோம்” என கௌதம் அதானி ட்வீட் செய்திருக்கிறார். இரு நிறுவனங்களும் ஆண்டுக்கு 7 கோடி டன் சிமெண்ட்டினை தயாரிக்கிறது. இந்திய உற்பத்தி துறையில் நடந்த மிகப்பெரிய கையகப்படுத்துதல் நடவடிக்கை இதுவாகும். இரு நிறுவனங்களுக்கும் கூட்டாக 23 ஆலைகள் உள்ளன.

ஹோல்சிம் குழுமத்தின் சிமெண்ட் பிரிவை வாங்குவதற்கு ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும், அல்ட்ராடெக் நிறுவனமும் போட்டியில் இருந்தது. ஆனால் அதானி குழுமம் வாங்கி இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் சிமெண்ட் நுகர்வு என்பது ஆண்டுக்கு 242 கிலோ மட்டுமே. ஆனால் சர்வதேச சராசரி என்பது 525 கிலோவாக இருக்கிறது. அதனால் வளர்ச்சிக்காக வாய்ப்பு இந்தியாவில் அதிகம் இருப்பதாக அதானி குழுமம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

2018-ம் ஆண்டு முதம் அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரு நிறுவனங்களின் செயல்பாட்டினை இணைப்பதற்காக நடவடிக்கையை ஹோல்சிம் குழுமம் எடுத்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கெய்ர்ன் நிறுவனம் வெளியேறியது. அதன் பிறகு இந்தியாவில் இருந்து வெளியேறும் மிகப்பெரிய நிறுவனம் ஹொல்சிம் குழுமமாகும்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் குழுமம் முக்கியமில்லாத பிரிவுகளை விற்பனை செய்துவருகிறது. சமீபத்தில் பிரேசில் யூனிட்டை விற்றது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள பிரிவுகளை விற்பனை செய்ய திட்டமிட்டது. தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com