\
மும்பை விமான நிலையத்தில் அதானி நிறுவன பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்

மும்பை விமான நிலையத்தில் அதானி நிறுவன பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்

மும்பை விமான நிலையத்தில் அதானி நிறுவன பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கிய சிவசேனா கட்சியினர்
Published on

மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்ட அதானி நிறுவன பெயர் பலகையை சிவசேனா கட்சியின் அடித்து நொறுக்கினர்.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்தின்கீழ் அதானி நிறுவனம் கடந்த மாதம் ஏற்றது. இதற்கு மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், மும்பை விமான நிலையத்தின் 74 சதவிகித உரிமையை வாங்கியதன் அடிப்படையில், சத்ரபதி சிவாஜி விமான நிலையம் என்ற பெயர் பலகையை மாற்றி அதானி விமான நிலையம் என பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த சிவசேனா கட்சியினர், பெயர்ப்பலகையை அடித்து நொறுக்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com