நடிகை ரம்யா, பாஜகவில் சேரப்போவதாக கன்னட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை ரம்யா. இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் 2013-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். அதற்கடுத்து நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் இவரது வழிகாட்டியும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, அடுத்தவாரம் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து ரம்யாவும் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆனால், ரம்யா இதுபற்றி எதுவும் பேச மறுத்துவருகிறார்.