நேரு குறித்து சர்ச்சை வீடியோவை வெளியிட்ட நடிகை கைது 

நேரு குறித்து சர்ச்சை வீடியோவை வெளியிட்ட நடிகை கைது 
நேரு குறித்து சர்ச்சை வீடியோவை வெளியிட்ட நடிகை கைது 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்த நடிகை பயல் ரோஹத்கியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.  

நடிகை மற்றும் மாடலாக இருப்பவர் பயல் ரோஹத்கி. இவர் கடந்த செப்டம்பர் 21 அன்று, ஒரு வீடியோ பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி இருந்ததாக தெரிகிறது. இந்த வீடியோ வடமாநில சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதனையடுத்து, ராஜஸ்தானிலுள்ள பூண்டியைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர் அக்டோபர் 10 ஆம் தேதி இவர் மீது புகார் கொடுத்தார். அதனை ஏற்று பயல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

பயல் தனது கைது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதில், “நேரு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக ராஜஸ்தான் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வீடியோ கூகுளிலுள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இங்கே கருத்து சுதந்திரம் நகைச்சுவை ஆகிவிட்டது” என்று அவர் கூறியுள்ளார். பயல் தனது ட்வீட்டை உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு டேக் செய்துள்ளார்.

கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில், பூண்டியிலுள்ள சதர் காவல்நிலைய பொறுப்பாளர் லோகேந்திர பாலிவால் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை அகமதாபாத்தை அடைந்ததாக தெரிகிறது. இந்தக் குழு 3 நாட்கள் அங்கே முகாமிட்டிருந்தது. இறுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று போலீசார் பயலை கைது செய்துள்ளனர். பயல், தனது தரப்பிலிருந்து முன்ஜாமீன் கேட்டு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

இந்தக் கைது குறித்து பூண்டி எஸ்.பி., குப்தா சில விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ஐபிசி, மற்றும் ஐடி சட்டத்தின் 504 & 505 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் அவருக்கு பலமுறை அறிவிப்புகளை அனுப்பினோம். ஆனால் அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை. எங்கள் குழு அவரை அகமதாபாத்தில் இருந்து பூண்டிக்கு அழைத்து வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோ பயல் தனது பேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார். இதில் சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் பிரதமருமான நேரு மற்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்து பயல் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com