\
28 வயது நடிகை சிறுநீரக செயலிழப்பால் மரணம் - கீட்டோ டயட் காரணம்?

28 வயது நடிகை சிறுநீரக செயலிழப்பால் மரணம் - கீட்டோ டயட் காரணம்?

28 வயது நடிகை சிறுநீரக செயலிழப்பால் மரணம் - கீட்டோ டயட் காரணம்?
Published on
கீட்டோ டயட் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து நடிகை மிஷ்டி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மிஷ்டி முகர்ஜி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சிறுநீரக பிரச்னைக்கு அவர் கடைபிடித்து வந்த கீட்டோ டயட்தான் காரணம் என கூறப்படுகிறது.
 
இளம்வயதிலேயே உயிரிழந்த மிஷ்டி முகர்ஜியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com