\
“ரிஸ்க் எடுங்க”- டர்பனில் கவனம் ஈர்க்கும் நடிகை மஞ்சு வாரியர்

“ரிஸ்க் எடுங்க”- டர்பனில் கவனம் ஈர்க்கும் நடிகை மஞ்சு வாரியர்

“ரிஸ்க் எடுங்க”- டர்பனில் கவனம் ஈர்க்கும் நடிகை மஞ்சு வாரியர்
Published on

டர்பனில் இருக்கும் நடிகை மஞ்சு வாரியரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தனது கணவர் திலீப்பை விவாகரத்து செய்தபின்னர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் வசூல் சாதனை செய்தது. அதைத்தான் தமிழில் ஜோதிகா நடிப்பில் ’36 வயதினிலே’ படமாக வெளியானது.

தமிழில் முதன்முறையாக தனுஷுடன் ’அசுரன்’ படத்தில் அறிமுகமானார். மூன்று குழந்தைகளின் தாயாக சிவசாமியின் மனைவியாக நடிப்பில் பிரமாதப்படுத்தி பாராட்டுக்களைக் குவித்தார்.

தற்போது பாலிவுட்டில் அறிமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக ’ameriki pandit’ படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் தலையில் டர்பன் கட்டிக்கொண்டு “ரிஸ்ட் எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com