\
”தமிழக அரசு நிர்பயா நிதியை பயன்படுத்தல” - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு!

”தமிழக அரசு நிர்பயா நிதியை பயன்படுத்தல” - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு!

”தமிழக அரசு நிர்பயா நிதியை பயன்படுத்தல” - தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு!
Published on

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “பெண்கள் நலனுக்காக நான் குரல்
கொடுப்பதை அறிந்து எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளார்கள். தமிழகத்திலுள்ள பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். தங்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேச தமிழக பெண்கள் முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தெரியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிரீதியாக நாங்கள் செயல்பட மாட்டோம்; கட்சிக்கு அப்பாற்பட்டு
பெண்கள் நலனுக்காக பாடுபடுவேன். நிர்பயா நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com