\
தெலங்கானாவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - நடனமாடி குஷ்பூ உற்சாகம்

தெலங்கானாவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - நடனமாடி குஷ்பூ உற்சாகம்

தெலங்கானாவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - நடனமாடி குஷ்பூ உற்சாகம்
Published on

தெலங்கானாவில் பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகையும், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ,
தொண்டர்களுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே. பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் என சுமார் 340 பேர் கலந்துகொள்கின்றனர்.

மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தையொட்டி ஹைதராபாத் முழுவதும் பாரதிய ஜனதா கொடிகள் மற்றும் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்யூ, தொண்டர்களுடன் உற்சாகமாக நடனமாடினார். முதல் நாளான இன்று பாரதிய ஜனதா தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் ஆலோசிக்கின்றனர்.

நாளைய தினம் மாநாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதே இரண்டு நாள் தேசிய செயற்குழுவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இ்ருக்கும் என்று பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹைதராபாத் செயற்குழு கூட்டத்தில் பங்குபெற வந்த அவரை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கின் முன் நடனமாடிக் கொண்டிருந்த நடனக் கலைஞர்கள் குஷ்பூவை தங்களுடன் ஆடுமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து குஷ்பூ அவர்களுடன் சேர்ந்து தாண்டியா நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com