\
கோலி இல்லாமல் தனியாக தீபாவளி கொண்டாட்டம்... அனுபவங்களை பகிர்ந்த அனுஷ்கா ஷர்மா

கோலி இல்லாமல் தனியாக தீபாவளி கொண்டாட்டம்... அனுபவங்களை பகிர்ந்த அனுஷ்கா ஷர்மா

கோலி இல்லாமல் தனியாக தீபாவளி கொண்டாட்டம்... அனுபவங்களை பகிர்ந்த அனுஷ்கா ஷர்மா
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியர் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் பெற்றோராக உள்ளனர். தற்போது கோலி ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணியோடு ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மா மும்பையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். 

இந்நிலையில் தீபாவளி திருநாளை கோலி இல்லாமல் கொண்டாடி அந்த அனுபவங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா.

“புத்தாடை அணிந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டேன். இந்த அனுபவம் நன்றாக உள்ளது” என சொல்லியுள்ளார்.

 
 
 
View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

அந்த பதிவில் தனது வெள்ளை நிற குர்த்தாவான தீபாவளி புத்தாடையோடு நிற்கின்ற படத்தையும் பகிர்ந்துள்ளார். 

அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் சைகையாலே பேசிக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவிட்டு டெஸ்ட் தொடரில் பாதியில் நாடு திரும்ப உள்ளார். அவருக்கு குழந்தை பேறுகால விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது பிசிசிஐ. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com