\
ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய டாப்ஸி, அனுராக் காஷ்யப்

ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய டாப்ஸி, அனுராக் காஷ்யப்

ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய டாப்ஸி, அனுராக் காஷ்யப்
Published on

தாக்குதலுக்கு ஆளான ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக டாப்ஸி பானு, அனுராக் காஷ்யப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நேற்று கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நகரங்களில் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

தாக்குதலுக்கு ஆளான ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக மும்பையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் டாப்ஸி பானு, அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், தியா மிர்ஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com