காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகர் சோனு சூட் சகோதரி மாளவிகா சூட்!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகர் சோனு சூட் சகோதரி மாளவிகா சூட்!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகர் சோனு சூட் சகோதரி மாளவிகா சூட்!
Published on

இந்திய சினிமா நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார். 117 தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மாளவிகா வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ‘மோகா’ தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் அவரை களம் இறக்குவதுதான் தங்களது விருப்பம் எனவும் பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். 

“இளமையான பெண் ஒருவர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நற்பெயரை சம்பாதித்தவர் அவர். தற்போது அற்பணிப்புடன் மக்கள் பணி செய்ய களமிறங்கியுள்ளார்” என மாளவிகாவை புகழ்ந்துள்ளார் சித்து. 

அண்மையில் பஞ்சாப் மாநில ஐகானாக செயல்பட்டு வந்த நடிகர் சோனு சூட் அந்த பொறுப்பிலிருந்து நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம். அவரது குடும்ப உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதால் அந்த பொறுப்பிலிருந்து சோனு சூட் விலகியதாக சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com