சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட்

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட்
சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய நடிகர் சோனு சூட்

பஞ்சாப்பில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை நடிகர் சோனு சூட் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மோகா-பதிண்டா சாலையில் நள்ளிரவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் அவ்வழியாக பயணித்த நடிகர் சோனு சூட் தனது காரை உடனடியாக நிறுத்தினார். விபத்து ஏற்பட்ட காரில் சிக்கிய இளைஞர்களை கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் மீட்கப்பட்டனர். மேலும் காரின் உள்ளே சிக்கிய இளைஞரை சோனு சூட் தூக்கிக் கொண்டு தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சோனு சூட்டின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த 43 மணி நேர போராட்டம் - மலையிடுக்கில் சிக்கிய கேரள இளைஞர் மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com