“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்”- ஆதித்யநாத் கருத்தை குறிப்பிட்டு சித்தார்த் ட்வீட்
“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” - உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ட்வீட்.
வழக்கக்காமக திரை பிரபலங்கள் அவரது ரீல் வாழ்க்கையில் பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்வது இல்லை. ஆனால் அதில் விதிவிலக்காக இருக்கிறார் நடிகர் சித்தார்த். “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லி இருந்தார். அவர் சொன்னதை ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களில் அந்த மாநிலத்தில் 394610 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.