“வரலாற்றிலேயே மறக்கமுடியாத மிக முக்கியமான நாள்... 500 ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு!” - ரஜினிகாந்த்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு வரலாற்றிலேயே மறக்கமுடியாத மிக முக்கியமான நிகழ்வு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அயோத்தி, ரஜினிகாந்த்
அயோத்தி, ரஜினிகாந்த்pt web

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், உச்சநீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் என பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பலரும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். மக்களும் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்திக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “500 ஆண்டுகளாக நடந்துவந்த பிரச்னை அது. அதற்கு தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றமே தீர்வினை கொடுத்துள்ளது. அதை இப்போது நிறைவேற்றிக்கொண்டு உள்ளார்கள். இந்த நாள் வரலாற்றிலேயே மறக்கமுடியாத மிக முக்கியமான நாள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com