\
நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்Facebook

ஐசிசி தலைவர் ஜெய்ஷாவை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
Published on

ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனையாளரை அனைவரும் கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர்; இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். ” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்
ஐசிசி தலைவரான ஜெய் ஷா| போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது எப்படி? பாகிஸ்தானுக்கு பாதிப்பா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவராக இருந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com