பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல வங்காள நடிகை பயல் சர்க்கார்!

பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல வங்காள நடிகை பயல் சர்க்கார்!
பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல வங்காள நடிகை பயல் சர்க்கார்!

மேற்கு வங்கத்தில் பிரபலங்களை கட்சியில் இணைக்க முனைப்பு காட்டி வருகிறது பாஜக. 

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி மேற்கு வங்காளத்தில் வலுவாக காலூன்றும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. இதனால் பிரபலங்களை கட்சியில் இணைக்க முனைப்பு காட்டி வருகிறது. வங்காள மொழி நடிகர், நடிகைகள், பா.ஜ.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், பிரபல வங்காள மொழி நடிகை பாயல் சர்கார் நேற்று மாநில பா.ஜ.க.  தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். நடிகர் யாஷ் தாஸ்குப்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா ஆகியோரும் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். பாயல் சர்கார் 30-க்கும் மேற்பட்ட வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது பலமுறை பெற்றவர் ஆவார்.  

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, வங்காள மொழி நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் மல்லிக், சயோனி கோஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com