அல்லு அர்ஜுன், பாஸ்கர்
அல்லு அர்ஜுன், பாஸ்கர்எக்ஸ் தளம்

கைதான உடனேயே அல்லு அர்ஜூனுக்கு கிடைத்த ஜாமீன்| ”வழக்கைக் கைவிட தயார்” - இறந்த பெண்ணின் கணவர்!

நடிகர் அல்லு அர்ஜுனின் மக்கள் தொடர்பு குழு பகிர்ந்துள்ள தகவலின்படி, வழக்கை கைவிட தயாராக இருப்பதாக குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Published on

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆறு நாட்களில் இப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்எக்ஸ் தளம்

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரேவதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன், பாஸ்கர்
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி.. புஷ்பா 2 பார்க்க சென்று சோகம்.. அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

இந்த நிலையில்தான், அந்தப் பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவருடைய கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்திருந்தார். அதுபோல வருண் தவான், ”சந்தியா திரையரங்கில் நடந்த விஷயம் மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஆனால், அதே நேரத்தில் ஒரு நபர் மீது மட்டும் குற்றத்தை சுமத்த முடியாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதற்கிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியானது. அதேநேரத்தில், அவரை ஜாமீனில் எடுக்கவும் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு, இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனின் மக்கள் தொடர்பு குழு பகிர்ந்துள்ள தகவலின்படி, வழக்கை கைவிட தயாராக இருப்பதாக குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர், "வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அல்லு அர்ஜூனுக்கும் என் மனைவி இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன், பாஸ்கர்
புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூன் கைது! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com