கொரோனா நிவாரணப்பணி: காம்பீரின் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளித்த அக்ஷய்குமார்!
கொரோனா நிவாரணப்பணிகளை செய்யும் முன்னாள் கிரிக்கெட் வீர்ர் கவுதம் காம்பீரின் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதியுதவி அளித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் சூழலில், கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிசெய்வதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீரின் அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் தெரிவித்த காம்பீர், "இந்த இருளில் ஒவ்வொரு உதவியும் நம்பிக்கையின் கதிராக வருகிறது" என்று எழுதியுள்ளார். இதற்கு பதிலளித்த அக்ஷய் குமார், "இது மிகவும் கடினமான காலமாக உள்ளது, இப்போது நான் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த நெருக்கடியிலிருந்து நாம் அனைவரும் விரைவில் வெளியேற விரும்புகிறேன்" என தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து குணமடைந்தார்.