“இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும்” - சமூக ஊடகங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

“இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும்” - சமூக ஊடகங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
“இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும்” - சமூக ஊடகங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அரசுக்கெதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் நிறுவனம் முழுவதுமாக இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், ’’சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்திய பயனர்களால் நீங்கள் (சமூக ஊடகங்கள்) வருவாய் ஈட்டுகிறீர்கள். ஆனால், நீங்கள் இந்திய அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும்.

சமூக வலைதளங்களின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம், அது பொது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இருப்பினும், போலி செய்திகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்தையும் பிரதமரையும் கூட விமர்சிக்க அனுமதிக்கிறது. ஆனால் போலிச் செய்திகளை பரப்புவதற்கு அனுமதிக்கப்படாது’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com