\
ஸ்டேஷனுக்குள் டான்ஸ்: போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

ஸ்டேஷனுக்குள் டான்ஸ்: போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

ஸ்டேஷனுக்குள் டான்ஸ்: போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை
Published on

போலீஸ் ஸ்டேஷனுக்குள் டான்ஸ் ஆடிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் பர்தமன் மாவட்டத்தில் உள்ளது அசன்சோல். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்ப்பவர் கிருஷ்ண சதன் மொண்டல். இவர் போலீஸ் சீருடை அணிந்தபடி, ஸ்டேஷனுக்குள்ளேயே சில இந்திப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார். இதை இன்னொரு போலீஸ்காரர் வீடியோ எடுத்தார். சில பெண்கள் அமர்ந்திருக்க அவர்கள் முன், அனுபவித்து ஆடினார் மொண்டல். ஆடியதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

வீடியோ வெளியில் பரவி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. விளைவு, வீடியோ எடுத்த போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மொண்டல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி வகிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com