மாயமான 500 டன் பாலம்; பட்டபகலில் நிகழ்த்தப்பட்ட திருட்டு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மாயமான 500 டன் பாலம்; பட்டபகலில் நிகழ்த்தப்பட்ட திருட்டு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மாயமான 500 டன் பாலம்; பட்டபகலில் நிகழ்த்தப்பட்ட திருட்டு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Published on

பீகாரில் 500 டன் எடை கொண்ட பாலம் திருடப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் அரசு அதிகாரிகள் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து 2 நாட்கள் கடுமையாக உழைத்து பாலத்தை திருடிச் சென்றுள்ள அதிர்ச்சி பின்னணி தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் நாசிரிங்க் பகுதியில் ஆற்றை கடந்து செல்லும் 60 அடி நீள இரும்புப் பாலம் ஒன்று இருந்தது. கடந்த 1966ம் ஆண்டு வரை இந்த பகுதியில் பாலம் இல்லாமல் மக்கள் படகில் தான் பயணம் செய்து வந்தனர். அப்பொழுது ஏற்பட்ட ஒரு விபத்தில் படகில் சென்றவர்கள் படகு கவிழ்ந்து நீரில் முழ்கினர். இந்த விபத்திற்கு பிறகு கடந்த 1972ம் ஆண்டு இப்பகுதியில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பின் அந்த ஆற்றில் படகு சேவை நிறுத்தப்பட்டு மக்கள் இரும்பு பாலத்தையே பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

நாளடைவில் அந்த இரும்பு பாலமும் சேதமடைந்த நிலையில் அப்பகுதியில் கான்கிரீட் காலம் ஒன்று இரும்பு பாலத்தை ஒட்டியே அமைக்கப்பட்டது. கான்கிரீட் பாலம் வந்ததும் மக்கள் எல்லோரும் புதுப் பாலத்தை மட்டுமே பயன்படுத்தினர். இரும்பு பாலம் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில திருடர்கள் அவ்வப்போது இந்த பாலத்தில் உள்ள இரும்பு கம்பியை அவ்வப்போது கழட்டி சென்று எடைக்கு போட்டு பணம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் இந்த வழியாக மக்கள் சென்ற போது அங்கிருந்த இரும்பு பாலம் முழுவதுமாக காணாமல் போயிருந்தது. 10 அடி அகலம், 12 அடி உயரம், 60 அடி நீளத்தில் இருந்த இரும்பு பாலம் மொத்தமாக காணாமல் போய்விட்டது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் இந்த திருட்டு பட்டபகலில் தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள் சிலர், கைவிடப்பட்ட பாலத்தை உடைக்க எரிவாயு கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து உழைத்து பாலத்தை அகற்றியுள்ளனர்.

பாலத்தை அகற்ற கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் உண்மையிலேயே வந்து அகற்றுவதாக நினைத்து விட்டதாக பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். "திருட்டுக் கும்பலில் சில உறுப்பினர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், மேலும் சிலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கூடிய விரைவில் பொது சொத்துக்களை அழித்து பாலத்தை திருடிய அனைவரையும் கைது செய்வோம்," என்று வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி சுபாஷ் குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com