உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இளம்பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பதர் என்ற கிராமத்தில் 18 வயது பெண்ணை 3 இளைஞர்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியுள்ளனர். இதில் முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள் நாட்டில் இன்னும் குறையாதது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

