
இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் இதுவரையான காலம் வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இந்த சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவானதுடன் அதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் ஒரு சம்பவம் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள்ளாகவே நடந்துள்ளது.
போதைபொருள் தடுப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணை கூண்டில் இருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிகிறது.
இதையும் படிக்க: தைவானை தனி நாடாக விளம்பரப்படுத்திய ஸ்னிக்கர்ஸ் -எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்பு கோரியது