”மும்மொழிக் கொள்கைதான்”: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

”மும்மொழிக் கொள்கைதான்”: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
”மும்மொழிக் கொள்கைதான்”: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் எழுப்பியது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.

விவாதங்கள் தொடர்கின்ற நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த மொழியும் திணிக்கப்படாது. மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய திருச்சி சிவா எம்பி, புதிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதத்தை மாநிலங்களவையில் முழுமையாக நடத்துவோம் என்று  தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com