இந்தியா
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தப் பகுதி: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தப் பகுதி: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட்
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.