\
அரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற பிடிபி கட்சி எம்.பிக்கள் வெளியேற்றம்

அரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற பிடிபி கட்சி எம்.பிக்கள் வெளியேற்றம்

அரசியல் சாசன பிரதியை கிழிக்க முயன்ற பிடிபி கட்சி எம்.பிக்கள் வெளியேற்றம்
Published on

காஷ்மீருக்கு சிறந்து அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் சாசன பிரதிகளை கிழிக்க முயற்சித்த பிடிபி கட்சி எம்பிக்கள் இருவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அரசியல் சாசன பிரதிகளை கிழிக்க முயற்சித்ததாக பிடிபி கட்சி எம்பிக்களான மிர் பயாஷ் மற்றும் நஸிர் அகமது இருவரையும் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்ற அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆணை பிறப்பித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com