இந்தியாவில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் சராசரியாக 29% உயர்வு - ஆய்வில் தகவல்

இந்தியாவில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் சராசரியாக 29% உயர்வு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் சராசரியாக 29% உயர்வு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் சராசரியாக 29% உயர்ந்திருப்பதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் ஆகிய துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைவாய்ப்புகள் 29% உயர்ந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் அதிகபட்சமாக 152% வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. மருத்துவ சேவைகள் துறையில் 77 சதவிகிதமும் போக்குவரத்து துறையில் 68 சதவிகிதமும் நிதிச்சேவைகள் துறையில் 48 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கட்டுமானத்துறையில் 42 சதவிகிதமும் கல்வித்துறையில் 39 சதவிகிதமும் உற்பத்தி துறையில் 22 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளன.
2013-14ஆம் ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு இவ்விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்தாண்டில் மார்ச் 25 முதல் ஜூன் 20 வரையிலான தேசிய பொது முடக்க காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறையாக கட்டுமானத்துறை திகழ்கிறது. இதில் 6.7% பேர் ஊதியமின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அடுத்தபடியாக உணவகம் மற்றும் விருந்தோம்பல் துறையில் 4.9% பேர் ஊதியமற்ற நிலைக்கு ஆளாகினர். மருத்துவத்துறையில் மிகவும் குறைந்த பட்சமாக 0.2 சதவிகிதத்தினரே பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com