விபத்து மற்றும் தற்கொலையால் 2,200 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு
விபத்து மற்றும் தற்கொலை போன்ற காரணங்களால் 2,200 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை விபத்து மற்றும் தற்கொலை போன்றவற்றால் இரண்டாயிரத்து 200 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்திருப்பது புள்ளிவிவரம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சகஸ்த்ரா சீமா பல், அசாம் ரைபிள் படை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றில் இருந்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதில் 2014 முதல் 2018-ஆம் ஆண்டு வரை விபத்து மற்றும் தற்கொலை போன்ற காரணங்களால் 2,200 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 397 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.