குஜராத் | போக்குவரத்து காவலர்களுக்கு குளுகுளு ஏசி ஹெல்மெட்

குஜராத் மாநிலம் வதோதராவில் போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காக இந்த வகை தலைக்கவசங்களை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிரத்யேக ஏசி ஹெல்மெட்டை ஐஐஎம் வதோதரா மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இவை காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் இந்த ஏசி ஹெல்மெட்டியில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் வெயிலிலிருந்தும், முகத்தில் படியும் தூசு, துகள்களிலிருந்தும் காவலர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஏசி ஹெல்மெட்
அருணாச்சலப் பிரதேசம் | தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ளும் திகில் பயணம்!

முதற்கட்டமாக 450 போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com