பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஏபிவிபி மாணவர்கள்

பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஏபிவிபி மாணவர்கள்
பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த ஏபிவிபி மாணவர்கள்

கல்லூரி பேராசிரியர் ஒருவரை ஏபிவிபி மாணவர் அமைப்பு கட்டாயப்படுத்தி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் பேராசிரியர் சந்தீப் வாதர். இவர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், பாஜகவை சேர்ந்த பக்தாக்கள் ஏன் அதிகம் சத்தமிடுகின்றார்கள் என்றும், அவர்கள் தான் பல லட்சம் மக்களை பதட்டமடைய வைக்கும் போரை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது பாஜக தலைகுணிய வேண்டிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போர் பதட்டத்தை பயன்படுத்தி பாஜக அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு கடும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அதன்பின்னர், பேராசிரியர் சந்தீப் ஏபிவிபி மாணவர்கள் மத்தியில் வருத்தம் தெரிவித்தார். அப்போது ஏபிவிபி மாணவர்கள் அவரை கட்டாயப்படுத்தி மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வைத்தனர்.

அத்துடன், அந்த ஃபேஸ்புக் பதிவை நீக்கச் செய்ததுடன், இனிமேல் இதுபோன்று பதிவை போடக்கூடாது என்றும் சத்தியம் செய்ய வைத்தனர். இந்த சம்பவம் நடந்தபோது அங்கு காவலர் ஒருவர் இருந்தார். ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com