சண்டையில் மனைவியை ஓங்கி அறைந்த கணவர்: எம்எல்ஏ-வையும் விட்டுவைக்காத குடும்ப வன்முறை!

சண்டையில் மனைவியை ஓங்கி அறைந்த கணவர்: எம்எல்ஏ-வையும் விட்டுவைக்காத குடும்ப வன்முறை!

சண்டையில் மனைவியை ஓங்கி அறைந்த கணவர்: எம்எல்ஏ-வையும் விட்டுவைக்காத குடும்ப வன்முறை!
Published on

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ, அவரது கணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது வீட்டில் இருந்த சிசிடிவி-யில், அந்த எம்.எல்.ஏ.வை, அவரது கணவர் அறையும் வீடியோ இதுதொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகரித்து வரும் நிலையில், பெண் எம்.எல்.ஏ. ஒருவரே வன்முறையால் பாதிக்கப்படுவது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகி உள்ள சிசிடிவி காட்சியின்படி, இருதரப்பு ஆண்கள், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒரு குழுவில் பெண் எம்.எல்.ஏ இருக்கிறார். வாக்குவாதத்தின் நீட்சியாக, அவர் அங்கிருந்த ஆண் ஒருவரால் தாக்கப்படுகிறார். பின் உடனிருந்தவர்கள் அவரை காக்கின்றனர்.

பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைமை அதிகாரி மனிஷா இதுகுறித்து பேசுகையில், “அந்த வீடியோவை இணையத்தில் பார்த்தேன். பெண்ணொருவர், அதுவும் மக்களின் பிரதிநிதி இப்படி அவருடைய வீட்டில் கொடுமைக்கு உள்ளாவது அதிர்ச்சியையும் சோர்வையும் தருகின்றது.

பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பிரிந்தெர் இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்தில், “எம்.எல்.ஏ. பால்ஜிந்தர் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமே, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வழியில்லை. இவ்விஷயத்தில் ஆண்களின் மனநிலை மாற வேண்டும். அதுவே பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் தீர்வு.

ஏனெனில் இதுபோன்ற செயல்களை செய்பவர்களிடமே பிரச்னை உள்ளது. அதனால் இப்படியானவர்கள் மற்ற எல்லாத்தையும் விடவும், உங்களின் ஆண் ஆதிக்க அணுகுமுறையை முதலில் மாற்றுங்கள்” என்றுள்ளார்.

பெண்கள் மீதான வன்முறை இந்தியாவில் எந்த அளவுக்கு பரவிக்கிடக்கிறது என்பதற்கு, இந்த சம்பவமே சமீபத்திய உதாரணம். இது ஒழிக்கப்படுவதே, பாதுகாப்பான இந்தியாவுக்கான வழி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com