அடுத்த ஆண்டு ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த ஆண்டு ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த ஆண்டு ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

அடுத்து ஆண்டு நடைபெற இருக்கும் ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதன்படி உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரசேதம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போட்டியிட உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கட்சியின் 9-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து பேசிய அவர், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். டிராக்டர் பேரணியை சீர்குலைக்க பாஜக வேலை செய்யததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பட்ஜெட் தொடரையொட்டி நாளை நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் உரையை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்க உள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com