பெரும்பான்மை தொகுதிகளில் டெபாசிட் இழந்தது ஆம் ஆத்மி
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 2 தொகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பிரித்துள்ள ஆம் ஆத்மி, ஏனைய அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது.
இவற்றில் சில தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தாண்டவில்லை. சோட்டா உதேபூர் தொகுதியில் போட்டியிட்ட அருன்பாய் வெர்சிங்பா ரத்வா பெற்ற 4,500 வாக்குகளே, ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்ற அதிக வாக்குகளாகும். இந்த தொகுதியில் இந்த வேட்பாளர் கணிசமாக வாக்குகளை பிரித்ததால், பா.ஜ.க. தோல்வியடைந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சோடுபாய் ரத்வா 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.