'கொரோனா தடுப்பூசி, மருத்துவ அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதார் கட்டாயமில்லை' - UIDAI தகவல்

'கொரோனா தடுப்பூசி, மருத்துவ அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதார் கட்டாயமில்லை' - UIDAI தகவல்

'கொரோனா தடுப்பூசி, மருத்துவ அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதார் கட்டாயமில்லை' - UIDAI தகவல்
Published on

ஆதார் இல்லை என்பதற்காக, யாருக்கும் தடுப்பசி மருந்து அல்லது மருந்துவமனை சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI - உடாய்) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் தேவை என்பதற்காக குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாகக் கூறி சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு எதிராக தற்போதைய கொரோனா சூழ்நிலைகளில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

கொரோனா தொற்று சூழ்நிலைகளில் ஒருவருக்கு ஆதார் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படாது என்று உடாய் கூறியுள்ளது. ஒருவரிடம் ஆதார் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதார் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும்.

எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று உடாய் கூறியுள்ளது. ஆதார் நிறுவனத்தில் நிறுவப்பட்ட விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை (Exception Handling Mechanism) உள்ளது. மேலும், ஆதார் இல்லாத நிலையில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய இதனை பின்பற்ற வேண்டும். வேறு காரணங்களுக்காக ஒரு குடியிருப்பாளர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின்படி அத்தியாவசிய சேவைகளை மறுக்கக் கூடாது.

தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வாயிலாக பொது சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே ஆதாரின் நோக்கம் என்று உடாய் கூறியுள்ளது. உடாய், 24 அக்டோபர் 2017 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின் வாயிலாக, விதிவிலக்கு கையாளுதல் விதிமுறைகளின்படி எந்தவொரு பயனாளிக்கும் ஆதார் வேண்டும் என்பதற்காக சேவைகள் மறுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும், ஆதார் சட்டத்தில் பிரிவு 7-ன் கீழ் விலக்கு மற்றும் மறுப்புகள் இல்லை என்பதை உறுதிகப்படுத்துகிறது.

மேலும், அமைச்சரவை செயலகம் டிசம்பர் 19, 2017 அன்று தேதியில் வெளியிட்ட ஆணையில் ஆதார் இல்லாத குடியிருப்பாளர்கள் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறையை தெளிவாக விளக்கியுள்ளது.

இது போன்ற சேவைகள் மறுக்கப்பட்டால். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு விஷயத்தை கொண்டுவர வேண்டும் என்று உடாய் அறிவுறுத்துகிறது. இந்தத் தகவல், பெங்களூரு உடாய் மண்டல அலுவலக மேலாளர் ஆனந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com