காச நோயாளிகள் மத்திய அரசு திட்டங்களின் கீழ் நிதி உதவி பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய காசநோயாளிகள் தடுப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள காசநோயாளிகள், காசநோய் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவச் செலவுகளுக்கு, நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த சலுகையின் கீழ் தொடர்ந்து நிதி உதவி பெற ஆதார் எண்ணை பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வங்கிகள், பத்திரப்பதிவு, எரிவாயு இணைப்பு, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியிருந்த நிலையில் தற்போது மருத்துவத்திற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.