திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி என்றாலே லட்டு தான் ஃபேமஸ். திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் தான், ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு செய்பவர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.