ஆதார் மூலம் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் சிக்கியது - ரவிசங்கர் பிரசாத்

ஆதார் மூலம் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் சிக்கியது - ரவிசங்கர் பிரசாத்
ஆதார் மூலம் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் சிக்கியது - ரவிசங்கர் பிரசாத்

ஆதார் மூலம் 27 கோடி போலி ரேஷன் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், வங்கிக் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைப்பது மூலம் சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்பவர்களையும் போலி வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களையும் எளிதில் பிடிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், இது வரை 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆதார் மூலம் 3 கோடி போலி சிலிண்டர் இணைப்புகளும் 27 கோடி போலி ரேஷன் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நேரடி மானியத் திட்டம் மூலம் 58 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மீதமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com