\
ஆதார் வெற்றிக் கொடி நாட்டும்: நந்தன் நிலகேனி

ஆதார் வெற்றிக் கொடி நாட்டும்: நந்தன் நிலகேனி

ஆதார் வெற்றிக் கொடி நாட்டும்: நந்தன் நிலகேனி
Published on

ஆதார் நடைமுறை தடைகளை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டும் என நந்தன் நிலகேணி தெரிவித்துள்ளார்.

ஆதார் அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்கிய நிலகேணி தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தனி நபர் ரகசியம் அடிப்படை உரிமையே என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். 26 வயதில் இன்ஃபோசிஸை தொடங்கியவர்களில் ஒருவராக இருந்த தான் தற்போது 62-வது வயதில் மீண்டும் அதனுள் நுழைந்தது வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை காட்டுவதாகவும் நிலகேனி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com