\
சலுகைகளைப் பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை

சலுகைகளைப் பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை

சலுகைகளைப் பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை
Published on: 

சலுகைகளைப் பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். 

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள சுரேஷ் பிரபு, மூத்த குடிமக்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியினை ரயில்வேத் துறை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து அதற்கான தரவுகளைச் சேகரிக்கும் பணி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதலே தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மற்றவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com