ஆன்லைன் படிப்பில் முறைகேடு: வீடியோ பதிவு கட்டாயம்!
ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க மாணவர்களின் ஆதார் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் ஐ.ஐ.டி., கல்லுாரிகள், மற்ற பல்கலைக்களில் ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, யு.ஜி.சி., சார்பில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், கல்லுாரிகள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில், ஆன்லைன் படிப்புகளை துவங்கும் முறை பயிற்சியாளர்களின் நியமனம் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ‘அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில், ஆன்லைன் படிப்பில் சேர, மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம். தேர்வின் போது, மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் ஆய்வு செய்யப்படும். தேர்வின் போது, ஆன்லைன் மூலம், வீடியோ எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த விதிகள் குறித்து, கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள், தங்கள் கருத்துக்களை ஆக.31க்குள் அனுப்ப வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.