\
ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு!
Published on: 

வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் கால வரையறையின்றி
நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாருடன் இணைக்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை காலவரையை இன்றி நீட்டித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், ஆதாருக்கு எதிரான பல்வேறு வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருவதாகவும், இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண் இணைப்பை கட்டாயம் ஆக்க கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com