\
வாகன பதிவுக்கும் ஆதார் கட்டாயம்!

வாகன பதிவுக்கும் ஆதார் கட்டாயம்!

வாகன பதிவுக்கும் ஆதார் கட்டாயம்!
Published on

வாகன பதிவிற்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெலங்கானாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மஹேந்தர் ரெட்டி தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், தெலங்கானாவில் சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளது. அதேபோல், பெரிய அளவில் வாகன மாற்றம் நடைபெறுகிறது. எனவே வாகனங்கள் பதிவு செய்யவும் மற்றும் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com