“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு

“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு
“சமூக வலைத்தளங்களில் எனக்கு மிரட்டல்கள் வந்தன” - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான தீர்ப்பை வழங்கிய பிறகு தனக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள் வந்ததாக உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய முடியும் என்ற தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த வருடம் அளித்தது. இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி.டி.ஒய்.சந்திரசூட் இடம் பெற்று இருந்தார். இந்தத் தீர்ப்பிற்கு பிறகு அவர் சந்தித்த மிரட்டல்கள் குறித்து மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், “நான் சமூக வலைத்தளத்தில் இல்லை. ஆனால் சபரிமலை தீர்ப்பிற்குப் பின் எனக்கு அதிக மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்ததாக எனது நீதிபதி நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் தெரிவித்தனர். சபரிமலை தீர்ப்பிற்குப் பிறகு நீதிபதிகள் மீது வந்த அச்சுறுத்தல்களை பார்த்து அவர்கள் மிகவும் பயந்ததாக கூறினர். 

மேலும் இந்த வழக்கில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா கூறியதை நான் மதிக்கிறேன். என்னுடைய உதவியாளர்களும் என்னிடம் பெண்கள் உரிமை சார்ந்த வழக்கில் எவ்வாறு ஒரு பெண் நீதிபதி எதிர்மறையான தீர்ப்பை அளிக்க முடியும் எனக் கேட்டனர். அதற்கு எப்போதும் ஏன் ஆண் ஒரு மாதிரியாகவும் பெண் ஒரு மாதிரியாகவும் சிந்தக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள், நாங்கள் அனைவரும் ஒரு சட்ட வல்லுநர்கள் என்று கூறினேன்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com